வியாழன், 5 ஜூன், 2014

PTC தளங்கள்: செய்யக் கூடியவை/கூடாதவை(DO's/DON'Ts)

PTC தளங்களில் புதிதாக வருபவர்கள் பலரும் PTC தளத்தின் நிப‌ந்தனைகளை சரியாக நிறைவேற்றுவதில்லை.இதனால் பல மாதம் உழைத்து கேஷ் அவுட் செய்யும் நிலையில் கணக்கு சஸ்பென்ட் ஆகி விரக்தி அடைந்து விடுவார்கள்.எனவே முதலில் PTC தளங்களில் வேலை செய்யும் முன் முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரக்தி அடையாமல் சம்பாதிக்கலாம். 
1. ஒரு கம்ப்யூட்டருக்கு/IP (INTERNET PROVIDER)க்கு ஒரு கணக்கு‍/ இது PAID TO CLICK (PTC) தளங்களின் முக்கியமான நிபந்தனையாகும்.எனவே ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்காதீர்கள்.இது எல்லா தளங்களுக்கும் பொருந்தும்.  

2. நிலையான ஐபி அட்ரஸினைக் கொண்ட இணைப்பை வைத்துக் கொள்ளுங்கள்.மொபைல் அல்லது அலுவலக,ப்ரௌசிங் சென்டர்களில் உங்கள் கணக்கினைத் திறந்து வேலை செய்யாதீர்கள்.(சர்வே,கேப்ட்சா சைட்டுகளுக்கு அவசியமில்லை)3ஜி மோடங்களில் சிம்கார்ட் இணைப்புள்ள மோடத்தினைப் பயன்படுத்தக் கூடாது.இதுவும் நிலையான ஐபி அட்ரஸினைக் காட்டாது. தினம் இரண்டு மூன்று ஐபி அட்ரஸினை மாற்றி மாற்றிக் காட்டும்.ப்ராட் பேன்ட் கனெக்சன் அல்லது டாட்டா போட்டான் போன்ற சிம் அல்லாத 3ஜி மோடங்களைப் பயன்படுத்துங்கள்.உங்கள் ஐபி அட்ரசினை whatismyipaddress.com ல் சென்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.Modem வாங்கிய புதிதில் ஒரே நாளில் இரண்டு மூன்று முறை சரி பாருங்கள். ஒரே ஐபியினைக் காட்டினால் சரி.ஐபி அட்ரஸில் முதல் 2 ட்ஜிட் மாறாது நிலையாக இருக்க வேண்டும். அடுத்த இரண்டு டிஜிட் அடிக்கடி மாறும்.அதைப் பெரிதாக எடுக்க வேண்டாம்.

Example:

Static IP : 96.04.174.234,  96.04.233.343,  96.04.767.433

Changing IP :  96.04.174.234,  133.233.344.322,  22.33.211.99 


3. முதலில் உங்கள் வங்கிக் கணக்குடன் ஒரு பேபால் கணக்கினை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பிடிசி தளத்தில் பதிவு செய்யும் போது பேபால் அட்ரஸினைக் கேட்பார்கள்.எனவே பேபால் முக்கியம்.அப்போதுதான் நீங்கள் பணத்தினைப் பெற முடியும். 


4.  பிடிசி தளங்களில் பதிவு செய்யும் போது உங்கள் உண்மை பெயர்,முகவரி,போன் நம்பர் கொடுத்து பதிவு செய்வது நல்லது.சில தளங்கள் பே அவுட்டின் போது மொபைல் பின் வெரிஃபிகெஷன் செய்யலாம்.யூசர் நேம் தங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம்.ஒவ்வொரு தளத்திற்கும் வித்தியாசமான யூசர்நேம் பாஸ்வேர்டு பயன்படுத்துவது நல்லது.பாஸ்வேர்டு எண்,எழுத்து என பலமாக இருத்தல் நல்லது.

Ex :  Pottal@2020

5. PTC தளங்களில் பதிவு செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு உடனடியாக ஒரு கன்ஃபிர்மெஷன் மெயில் அனுப்பப்படும். உங்கள் இன்பாக்ஸில் சென்று அதில் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து பிறகு வரும் தளத்தில் லாக் இன் ஆனால்தான் உங்கள் பிடிசி கணக்கு உறுதி செய்யப்படும்.

6.  பல தளங்களில் ஃபிக்ஸ்ட் ஆட்ஸ் எனப்படும் ஆரஞ்சு நிற விளம்பரங்கள் 4 இருக்கும்.நீங்கள் ரென்டல் ரெஃப்ரல்கள் எடுத்திருந்தால் இதனைத்(அல்லது வேறு 4 ஆட்ஸ்)தினமும் 24 மணி நேரத்திற்குள்ளாகக் கண்டிப்பாகக் க்ளிக் செய்துப் பார்க்க வேண்டும்.ஒரு நாள் தவறினாலும் உங்கள் ரென்டல் க்ளிக்ஸ் மறுநாள் க்ரெடிட் ஆகாது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

7.   கம்ப்யூட்டர் அல்லது நெட் கனெக்செனை மாற்றினால் பழையதிலிருந்து Ads பார்த்த 24 நான்கு மணி நேரங்கள் கழித்தே மீண்டும் தளங்களை ஓபன் செய்து விளம்பரங்களைப் பார்க்கலாம்.  புதிய கம்ப்யூட்டருக்கு மாற்றினால் 24 மணி நேரம்/ப‌ழைய கம்ப்யூட்டர் (இதே போல் வேறொருவர் அந்த கம்ப்யூட்டரில் பிடிசி தளங்களில் வேலை செய்திருப்பதாக சந்தேகம் இருந்தால்) 72 மணி நேரம் கழித்தே அதில் லாக் இன் ஆகுங்கள்.(குறிப்பாக ப்ரோபக்ஸ் தளம்)

8.          FORUM போன்றவைகளில் அந்த தளங்களைத் தாக்கியோ,              தாறுமாறகவோ எழுதினால் உங்கள் கணக்கு முடக்கப்ப்ட்டுவிடும்.சந்தேகங்கள்,பிரச்சினைகளை எழுதாலாம் அல்லது சப்போர்ட் பகுதிக்கு மெயில் அனுப்புங்கள்.

9. இந்தியர்கள் PAYZA,PERFECT MONEY,SKRILL NETTELLER போன்ற பேமென்ட் ப்ராசெஸ்ஸர்களைப் பயன்படுத்த வேண்டாம்.அதிலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணத்தினை மாற்றுவது கடினம்.அதிக ஃபீஸ் வசூலிக்கப்படும்.எனவே பேபாலே சிறந்தது.முடிந்த வரை பேபால் உள்ள தளங்களிலேயே வேலை செய்யுங்கள்.அரிதாக ஓரிரு தளங்களில் பேய்சாவினைப் பயன்படுத்த வேண்டி வந்தால் அதில் 5$ வந்ததும் ரென்டல் ரெஃப்ரல்கள் எடுக்க ADD FUNDSல்(NEOBUX,PROBUX) பயன்படுத்திக் கொள்ளலாம்.


10. சர்வேக்களை செய்யும் போது ஆரம்பம்,நடுவில்,கடைசியில் என நான்கைந்து ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.குரோம் ப்ரௌசரில் இந்த ஆப்ஷன் உண்டு.பணம் க்ரெடிட் ஆகவில்லையெனில் இவற்றினை அட்டாச் செய்து SUPPORT பகுதிக்கு அனுப்ப வேண்டி வரும்.

11. ஒரு தளத்தில் முடித்த ஆஃப்ரகள் சர்வேக்களை அடுத்த தளத்தில் முடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் ப்ரௌசரில் உள்ள COOKIES,HISTORY போன்றவற்றை DELETE செய்து விடுங்கள்.பிறகு லாக் இன் ஆகி அதே ஆஃபர்களைச் செய்யுங்கள்.இந்த குக்கீஸ்கள் ஏற்கனவே நாம் செய்திருப்பது பற்றி ஆஃபர் தளங்களுக்கு காட்டிக் கொடுக்கும் என்பதால் திரும்பச் செய்தால் பணம் க்ரெடிட் ஆகாது அல்லது ஆஃபர்வால்ஸ் முடக்கப்பட்டுவிடும். வாரம் ஒருமுறை குக்கீஸ் டெலிட் செய்வது நல்லது.

12. மொத்தத்தில் புதிய தளங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.பழைய தளங்களில் கூட‌ அப்கிரேடு ஆகும் முன் உங்கள் இலாப நஷ்டங்களைக் கணக்கிட்டு அப்கிரேடு ஆகுங்கள்.ரென்டல் ரெஃப்ரலகளில் உள்ள இலாப நஷ்டத்தினைப் புரிந்து செயல்படுங்கள்.முடிந்த அளவு உங்கள் ஆரம்ப கட்ட முதலீட்டினை வெளிக் கொண்டு வந்த பிறகு அதில் வரும் இலாபத்திலேயே ரொட்டேட் செய்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக