வெள்ளி, 17 மே, 2013

அட்சய திரிதையில் நாம் பெற்ற இலாபம்


அட்சய திரிதையில் ஆன்லைனில் தங்கம் வாங்கி/விற்று இலாபம் பெற நாம் கொடுத்த டிப்ஸ்http://pottal.blogspot.in/2013/05/blog-post_12.html.

நாம் கணித்தவாறே இந்தியர்கள் வாங்க ஐரோப்பியர்கள் விற்று வெளியேறிவிட்டார்கள்.ஆதலால் இனியாவது பழைய நம்பிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் காலத்திற்கேற்ப டெக்னிக்கல் அறிவினையும் விரிவுப‌டுத்திக் கொள்ளூங்கள்.நாம் சொன்னவாறே தங்கம் ஃப்ளாட் மூவ்மெண்டினை உடைத்து கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.அட்சய திரிதையில் நாம் சொன்ன இரண்டு இலக்குகளும் பூர்த்தியாகி சுமார் 10 கிராமிற்கு 650 ரூபாய் இலாபம் கொடுத்துள்ளது.சுமார் 100கி எனக் கணக்கிட்டோமானால் 6500 ரூ இலாபம்.100கி தங்கத்தின் மதிப்பு சுமார் 2.5 லட்சமாக இருந்தாலும் நாம் MCXல் நாம் வைக்க வேண்டிய மார்ஜின் பணம் 4 % மட்டுமே.அதாவது சுமார் 10000 ரூ மட்டுமே.ஆக ஐந்தே நாளில் 10000 ரூபாய் முதலீட்டில் 6500 ரூபாய் இலாபம்.சிறு வணிகராக இருந்தால் சுமார் 1000 ரூபாய் முதலீட்டில் 650 ரூபாய் இலாபம். சரி சார்டினைப் பாருங்கள்.தங்கம் கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.நமதுhttp://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html ரிப்போர்ட்படி இன்னும் சில வாரங்களில் 25000 என்ற இலக்கிற்கு வந்து விட வாய்ப்பு உள்ளது.ஆதலால் தகுந்த மார்ஜின் மற்றும் நஷ்டத்தடுப்புடன் செயல்பட்டால்TORTOISE PORTFOLIO என்றும் இலாபத்தையே அள்ளிக் கொடுக்கும். வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக