திங்கள், 22 ஏப்ரல், 2013

TORTOISE PORTFOLIO:முதல் நாள் முதல் டார்கெட் ரீச்நமது போர்ட்ஃபோலியோ ஆமை என்றாலும் பங்குகள் காளை வேகத்திலேயே பயணிக்கும்.சில தருணங்களில் நமது பொறுமையப் பரிசோதிக்கும் விதமாக சந்தை ஒரு ஃப்ளாட் மூவ்மெண்டில் செல்லும் போது மட்டுமே நமக்கு ஆமையின் பொறுமை அவசியம்.அதற்காகவே உங்களை ஆமை ஓட்டுக்குள் உட்கார வைத்திருக்கிறோம்.இந்த வாரத்தில் முதல் நாளிலேயே NSEல் இரண்டு பங்குகளும் நமது பரிந்துரை விலையில் வாங்கும் வாய்ப்பில் அமைந்து,ஆந்திரா பேங்க் முதல் டார்கெட்டை 95.70 ஐயும்,கோத்ரேஜ் அதிக பட்ச உயரமாக 316.90 ஐயும் தொட்டு முடிவடைந்துள்ளன.இந்த விலையில் பாதி பங்குகளை விற்று விட்டு மீதி பங்குகளை வாங்கிய விலையை நட்டத் தடுப்பாகக் கொண்டு இரண்டாவது டார்கெட்டிற்காக காத்திருக்கலாம்.நமது போர்ட்போலியோவில் வெற்றி சதவீதம் எப்பொழுதும் 70 ற்கு குறையாது என எதிர்பார்ப்பதால் பத்தில் மூன்று பங்குகளே நட்டத்தடுப்பை உடைக்க வாய்ப்புள்ளது.எனவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கோல்டன் விதிகளை கடைபிடிக்க வேண்டியதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக