வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தங்கத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சிப் பதிவு.!!!ஆம்.தங்கத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சிப் பதிவுதான்.தங்கத்தில் அதுவும் ஆபரணத்தில் முதலீடு என்பது கிட்டத்தட்ட ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட்தான்.அதிலும் இரண்டு வருட லாபத்தை (கிட்டத்தட்ட 20 சதவீதம்)நமது நகைக் கடைக்காரர்களே செய்கூலி சேதாரம் என்ற் பெயரில் ஏப்பம் விட்டுவிடுவார்கள்.நம் மக்களை பாதுகாப்பு என்ற வளையத்திற்குள் அடக்கி வைத்திருக்கும் ஒரு ரிங் மாஸ்டர்.அவ்வளவுதான். நம்மைப் (இந்தியர்கள்) பொறுத்த வரை அது மிகவும் செண்டிமென்டான விசயம்தான்.தங்கத்தின் மீதான முதலீட்டின் சராசரி வருமானம் ஆண்டிற்கு கணக்கிட்டால் அது நமது தபால்துறை வட்டிக்குத்தான் தேறும்.இந்திரவிகாஸ் பாண்ட் கூட ஏழரை வருடங்களில் டபுள் ஆகிவிடும்.இந்த வருடம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகத்தை காணும் என்பதினை டெக்னிக்கல் முன்பே காட்டிவிட்டது.இந்த சார்ட்டைப் பார்த்தீர்களா? என்ன ஓன்றும் புரியவில்லையா? தங்கம் இந்த வருடத்தின் ஜனவரி மாத குறைந்த விலையை உடைத்து இறங்க ஆரம்பித்தவுடனே டெக்னிக்கல் கணிப்பு படி இந்த வருடம் முழுதும் அது ஜனவரி மாதத்தின் உயர் விலையை மீண்டும் உடைக்க வாய்ப்பில்லை என்பதுதான்.ஃப்யூச்சர் காண்ட்ராக்டில் தாரளமாக விற்று வைத்திருப்பீர்களானால் ஜனவரி மாத உயர்விலைய நட்டத்தடுப்பாகக் கொண்டு காத்திருந்தால் கொள்ளை லாபம்தான்.ஆனாலும் இவ்வளவு அதிரடி குறைவை எதிர்பார்க்கவில்லை.ஆயிரம் பாயிண்டுகளிலேயே லாபத்தை பிடித்து விட்டேன்.கணிப்புகள் ஆயிரம் கூறினாலும் கண்ணில் கிடைத்த லாபத்தை எடுப்பதுதானே புத்திசாலித்தானம்.இல்லையெனில் அது வலம்புரிச் சக்கரம் போல திரும்பி நம்மைத் தாக்கிவிடும்.அது சரி எல்லாம் நடந்து முடிந்த பிறகு கூறினால் எப்படி நம்புவது என்கிறீர்களா? இது தங்கத்திற்கு மட்டுமல்ல அதிக வால்யூம் உள்ள (மக்கள் நடமாட்டம்)அனைத்து செயல்களுக்கும் உதாரணமாக வெள்ளீ,காப்பர்,ஏன் சென்செக்ஸ்,நிஃப்டி,யூரோ, டாலர்,அனைத்து நாட்டுப் பங்குச் சந்தைகளுக்கும்,அரிசி வியாபாரம் முதல் அமெரிக்க டாலர் வரை இது 80 சதவீதம் பொருந்தும் உளவியல் அடிப்படை.அதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ்.வேண்டுமானால் பழைய பத்து வருட சார்ட்டைhttp://www.icharts.in/ எடுத்து ஆராய்ந்து பாருங்கள்.இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஏதுவாக செயல்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக