ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

TORTOISE PORTFOLIOநீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவைப் புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பங்குச் சந்தை நான்கு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டு இருக்கிறது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு பலர் முயன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.முயல் வேகத்தில் சந்தை ஓடுவதும்,வழுக்கி விழுவதும் ,படுத்து உறங்குவதும் அதன் இயல்பு. அதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஆமை வேகத்தில் பயணிப்பவர்களே இறுதி வெற்றியை அடைகிறார்கள். Success means winning not every battle, winning the war at last. இதே நிதானத்துடன் ஓர் Portfolioஐ உருவாக்க முயற்சிக்கிறோம்.உடனடி பலன்களை எதிர்பார்க்காமல் உடன் வருபவர்கள் மட்டும் வரலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் மறுபார்வை செய்யப் படும்.வழக்கம் போல் பங்குச் சந்தையின் Risk Factor, Disclaimer தெரிந்தவர்களும்,ஒழுக்கத்துடன் விதிமுறைகளை கடை பிடிப்பவர்கள் மட்டும் வரலாம்.‌‌

விதி : கொடுக்கப்பட்டுள்ள Buy Above விலைக்கு மேல் உடைத்த பிறகே வாங்க வேண்டும்.உடைத்த பிறகு கீழ் நோக்கி வந்தாலும் அதன் Stop Lossற்கு முன்பு வரை ஆவரேஜ் செய்யலாம்.ஆனால் Stop Loss & Target 1 ல் பாதியும், Target 2ல் பாதியும் கட்டாயம் கொடுத்து விட்டு வெளியேறி விட வேண்டும். Stop Loss & Tgt 1,2 ரீச் ஆகாத பட்சத்தில் positionஐ மறு நாளோ,அதற்கு அடுத்த நாட்களுக்கும் எடுத்துச் செல்லலாம்.

அடுத்த பதிவிலிருந்து ஆரம்பிப்போம். நன்றி.

2 கருத்துகள்: