சனி, 30 ஜனவரி, 2016

TORTOISE PORTFOLIO : பாயத் தயாராகும் பங்குச் சந்தை. 


பிப்ரவரி மாதம் பட்ஜெட் மாதம் என்பதால் பங்குகள் பலவும் ஜெட் வேகத்தில்தான் ஏறி இறங்கும்.எனவே எப்போதும் நஷ்டத் தடுப்பு என்னும் பாதுகாப்புக் கருவியுடன் வர்த்தகம் புரியுங்கள்.

இந்த வாரம் 7563ல் நிஃப்டி க்ளோஸ் ஆகியுள்ள நிலையினைப் பார்க்கும் போது

விரைவிலேயே மேல் நோக்கிச் சென்று 7700 என்ற பாயிண்ட்டினை நெருங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


ஃப்யூச்சர் மற்றும் பங்குகள் வாங்கி விற்பவர்கள் 7400 என்ற பாயிண்டினை மனதளவில் நஷ்டத்தடுப்பாக வைத்துக் கொண்டு வர்த்தகம் புரிந்து உடனுக்குடன் இலாபங்களை புக் செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் இந்த மாதம் நாம் பரிந்துரைக்கும் பங்கு NDTV ஆகும்.சீக்கிரமே இந்தப் பங்கானாது இப்போதைய விலையான ரூ 75 லிருந்து ரூ 100ஐ நெருங்கும் வாய்ப்புகள் அதிகம்.

மனதளவில் (Trailing Stop loss) ரூ 65ஐ நஷ்டத் தடுப்பாகக் கொண்டு நீங்கள் வாங்கிய பிறகு ரூ 100 ஐ நோக்கிய பயணத்தில் நல்ல இலாபம் கிடைக்கும் போது விற்று வாங்கி தொடரலாம்.

உதாரணமாக 1000 பங்குகள் ரூ 7500க்கு வாங்குகிறீர்கள் என்றால் ரூ 85ல் 500 பங்குகளை விற்று இலாபத்தினைப் புக் செய்யலாம்.மீதி 500ஐ ரூ 97 அல்லது  98ல் விற்று வெளியேறலாம்.

இந்த வாரத்தில் ரூ 78ஐ கண்டிப்பாக நெருங்கும் வாய்ப்புகள் உள்ளது.

அப்போது கூட 200 பங்குகளை விற்று இலாபம் பார்க்கலாம்.கீழே வந்தால் மீண்டும் வாங்கி ஆவரேஜ் செய்யலாம்.

நஷ்டத்தடுப்பிலும் சுமார் ரூ 69க்கு கீழ் வரும் போது பாதியினையும் ரூ 63க்கு கீழ் வரும் போது பாதியினையும் விற்று நஷ்டத்தினைத் தவிர்க்கலாம்.

இதனையே நாம் ஒரு பேப்பர் ட்ரேடிங்காக வைத்து 1000 பங்குகளுக்கான இலாப நஷ்டத்தினை இனி வருங்காலங்களில் கணிப்போம்.