சனி, 2 ஜனவரி, 2016

PAYPAL :போலி மெயில் அலெர்ட்


நமது பாதுகாப்பான ஆன்லைன் வங்கியான‌ பேபால் தளத்திலிருந்து அனுப்பவது போல ஒரு போலி மெயில் பேபால் வைத்திருப்போரின் மெயில் INBOX களுக்கு வருகிறது.

இது ஒரு போலியான மெயில் என்பதை அது வந்திருக்கும் முகவரியினை நன்கு கவனித்தாலே அறியலாம்.மேலும் உங்கள் பேபால் கணக்கு முடக்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் மூலம் லாக் இன் ஆகவும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் சென்றால் பேபால் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு போலியான தளம் இருக்கும்.அதில் வெப் முகவரியும் போலியாக இருக்கும்.

இந்த லிங்க் மூலம் சென்று நீங்கள் லாக் இன் செய்தால் உங்கள் பேபால் கணக்கினை லாக் இன் செய்தால் உங்கள் கணக்கினை ஹேக் செய்துவிடுவார்கள்.

எனவே இது போன்ற மெயில்களைத் தவிர்த்து நேரடியாக பேபால் தளத்தின் மூலம் மட்டுமே எப்போதும் லாக் இன் ஆகவும்.

இது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் பொருந்தும்.