வியாழன், 7 நவம்பர், 2013

உழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்தியமா?சவுடாலா

ஆன்லைன் ஜாப்பில் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் பலருக்கும் ஒரே நாளில் ஒரு டாலர் (ரூ 60/) சம்பாதிப்பது கூட பெரும்பாடாகத்தான் தோன்றும்.இந்த நிலையில் நான் அடிக்கடி ஒரே நாளில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றால் அது எல்லோருக்கும் அப்பட்டமான பொய்யாகவேத் தோன்றும்.கடும் பயிற்சியும் பழக்கமும் இருந்தால் பழகிய டாஸ்குகள் மட்டுமல்ல புதிதாக நீங்கள் முதன் முதலில் செய்யும் டாஸ்குகளில் கூட ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பது சாத்தியமே.இதற்கு நான் ஏற்கன‌வே பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன்.ஒரு சின்ன குறை உழைப்புடன் சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும்.அதாவது பணிகள் கிடைக்கும் நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இருப்பதோடு பணிகளைத் தொடர்ந்து பத்து மணி நேரத்திற்கும் மேலாகச் செய்ய உங்களுக்கு அவகாசமும் இருக்க வேண்டும்.அதனோடு க்ரௌட் ஃப்ளவர் கம்பெனி ஒரு குறிப்பிட்ட பணிகளுக்குப் பிறகு பணிகள் மீதம் இருந்தாலும் உங்கள் அக்குயுரெசி அதிகமாக இருந்தாலும் பல நேரங்களில் உங்களுக்கு  தேங்கஸ் கொடுத்து வெளியேற்றி விடுவார்கள்.அவ்வாறு வெளியேற்றாமல் இருக்க சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும்.அப்படியே வெளியேற்றினாலும் மற்ற பிடிசி தளங்களில் அதே பணியில் நீங்கள் தொடர்ந்து சம்பாதிக்கலாம்.   இப்படி ஒரே பணியில் இன்று க்ளிக் சென்ஸில் நான் 166 டாஸ்குகள் முடித்து சுமார் 1300 ரூ ஒரே நாளில் சம்பாதித்து உள்ளேன்.மற்ற பணிகளையும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 27$ (ரூ 1700/‍) பே அவுட் ரெடி செய்து விட்டேன்.நாளை என் பேபால் கணக்கிற்கு வந்து விடும்.

செய்த டாஸ்கின் பெயர்

What are the dominant formats of these Youtube Channels?

ஒரு டாஸ்கிற்கு 0.13$ பேமெண்ட்.முதலில் ஒரு டாஸ்கினை முடிப்பதற்கு பத்து நிமிடம் எடுத்துக் கொண்டது.ஒரு மணி நேரத்தில் சுமார் 6 டாஸ்குகளே செய்ய முடிந்தது.அதுவும் பணியினை மிகவும் பெர்ஃபெக்டாகச் செய்ய வேண்டியிருந்தது.சிறு தவறு செய்தால் கூட அக்குய்ரெசி வேகமாகக் குறைய ஆரம்பித்தது.எனது மற்ற பணிகளில் பயன்படுத்தும் விரைவான ட்ரிக்ஸ்கள் எதுவும் எடுபடவில்லை.ஆனால் பணிக்கேற்ற ஊதியம் உள்ளதால் விடாமல் முயன்றேன்.சித்திரமும் கைப்பழ‌க்கம் என்பது போல போகப் போக டாஸ்குகளின் சூட்சமம் புரிந்தது.கடைசியில் ஒரு மணி நேரத்தில் 20 டாஸ்குகளுக்கும் மேல் அக்குய்ரெசி குறையாமல் செய்ய ஆரம்பித்தேன்.இன்னும் அந்த பணிகள் ஆயிரட்த்திற்கு மேல் இருக்கும் நிலையில் என்னை வெளியேற்றி விட்டார்கள்.

எனவே உழைத்தால் ஒரே நாளில் ஆன்லைன் ஜாப்பில் இரண்டாயிரம் ரூபாய் பார்ப்பது சாத்தியமே என்ற விவாதத்திற்கு ஆதாரம் சேர்த்துள்ளேன்.சவுடால் என்பவர்கள் ஆன்லைன் ஜாப்பினைப் பற்றிய அறியாமை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.ஆனால் பதினெட்டு மணி நேர விடா உழைப்பால் மட்டுமே ஒரே நாளில் இந்த 1700 ரூபாயினைச் சம்பாதிக்க முடிந்தது.உழைப்பு என்றும் உயர்வு தரும்தானே.மேலும் சர்வே ஜாப்ஸ்,டாஸ்குகள் பற்றிய டிப்ஸ்கள் படுகை கோல்டன மெம்பர் பகுதியில் தினமும் அப்டேட் ஆவதால் நீங்களும் படுகை கோல்டன் மெம்பராகி பலன் பெற வாழ்த்துக்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக